விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் முக்கிய தினமான ‘அனந்த் சதுர்த்தி’ நாளை மும்பையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அனந்த் சதுர்த்தியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் மக்கள் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு முன் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வருவது வழக்கமான நிகழ்வாகும்.
சிலைகளை ஊர்வலமாக கொண்டு வரும் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஊர்வலத்தில் கலவரம் நடைபெறாமல் இருக்க கூடுதலாக மாநில ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
ஊர்வலம் நடைபெறும் இடங்களில் ட்ரோன்களை பயன்படுத்தி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் 5 ஆயிரம் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் ஊர்வலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் என்றும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.