மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 10 வயது சிறுமியின் சிலம்பச் சாதனை நிகழ்வு நடை பெற்றது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நடுவத்தின் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்விற்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பேராசிரியர் மேஷாக் பொன்ராஜ் தலைமை வகித்தார்.
தமிழியல் துறைத் தலைவரும், தமிழ்ப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நடுவத்தின் பொறுப்பு இயக்குநருமான சத்தியமூர்த்தி ஒருங்கிணைப்பில், துணைப் பதிவாளர் மீனாட்சிசுந்தரம், நோபல் புக் ஆஃப் ரெக்கார்டு நிறுவனத்தின் சார்பாளர் கௌதம் முன்னிலை வகித்தனர் .

மதுரை சோம சுந்தரம் காலனி பகுதியை சேர்ந்தவர் சரவணப்பாண்டியன்-ரேவதி தம்பதியினர் மகள் ஹரிணி (10) 10 நிமிட’ம் 10 நொடிகளில் சிலம்பக் கலையில் 32 தற்காப்பு முறைகளை பயன்படுத்தி சாதனை புரிந்தார்.
இவர் கடந்த 6 வயது முதலே
சிலம்பம் பயின்று மாநில அளவில் பல்வேறு பதக்கங்கள் பெற்றுளார்.















