ரெம்டிசிவீர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
ஆக்சிஜன் சிலிண்டரை அதிக விலைக்கு விற்பதும், ரெம்டிசிவீரை கள்ளச்சந்தையில் பதுக்குவதும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டின் ஒவ்வொருவர் உயிர் மீதும் அக்கறை கொண்டு செயல்படும் இந்த அரசில் இவ்வாறு பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவர் என்று முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.














