முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தினார்கள். சென்னையில் மட்டும் 14 இடங்களில் நடத்தப்பட்டது. இதில் ரூ.2.16 கோடி பணம், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், அவர் சம்பாதித்த பணத்தை கிரிப்டோகரன்சியாக சேமித்துள்ளதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், ஒரு செல்போன் மட்டுமே கைப்பற்றப்பட்டதாக அமைச்சர் தரப்பில் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, கிரிப்டோகரன்சியை பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று தங்கமணி கூறினார்.














