போராடும் அரசு மருத்துவர்கள் இடமாற்றம்

0
526

இன்று வேலைக்கு வராத அரசு மருத்துவர்களுக்கு  பணி முறிவு அறிக்கை (பிரேக் இன் சர்வீஸ் நோட்டீஸ்) வழங்கி, அவர்கள் பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும் என நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று பணிக்கு வராத மருத்துவர்களுக்கு பணி முறிவு அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது. அரசு சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 17 பி பிரிவின்கீழ் அவர்களுக்கு இந்த அறிக்கை வழங்கப்படுகிறது. அத்துடன் சென்னையில் போராடும் மருத்துவர்கள் பலரை பணியிட மாற்றம் செய்தும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாக போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த வெளி மாவட்ட மருத்துவர்களை போலீசார் தடுத்து வெளியேற்றினர்.
அரசு மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்தால்
மருத்துவ சேவையில் குறைபாடு ஏற்படும். அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here