30 அடி உயர கட்டடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் – வாலிபரால் தூத்துக்குடியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

0
959

தூத்துக்குடி முத்தையாபுரம் தைச் சேர்ந்த பெருமாள் மகன் முருகேஷ் (30). இவரது தம்பி தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு ஸ்மார்ட்சிட்டி கட்டடத்தில் கட்டட பணியில் இருந்தபோது கீழே விழுந்து இறந்து விட்டார்.இதன்பின்னர் முருகேஷுக்கு தம்பி நினைவாக மனநலம் பாதிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு புறப்பட்டு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இந்நிலையில் இன்று மாலை தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் ஸ்மார்ட்சிட்டியாக கட்டப்பட்டு வரும் 30 அடி உயர வணிக வளாக கட்டிடத்தின் மேலே ஏறி தற்கொலை மிரட்டல் விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் அவரை கீழே இறங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.ஆனால் அதை அவர் சட்டை செய்யவில்லை. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு அவர்கள் சாதுரியமாக கட்டடத்தில் ஏறி முருகேஷை இறக்கினர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here