நாப்டால்ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் பெயரில் மோசடி

0
643

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பதிவஞ்சல் மூலம் நாப்டால் ஷாப்பிங் நிறுவனம் ( Naptol Online Shopping pvt. ltd) கம்பெனி ஆண்டு விழாவை முன்னிட்டு குலுக்கலில் பேருக்கு அதிர்ஷ்ட பரிசு பேருக்கு விழுந்துள்ளது என்றும், அதில் ஒரு நபர் நீங்கள் என்றும் கடிதம் வருகிறது.

ஒருவருக்கு வந்த கடிதத்தில் கொடுக்கப்பட்டிருந்த படிவத்தில் உங்களுக்கு 12,50,000 ரூபாய் லக்கி பரிசாக விழுந்துள்ளது என்றும் அது கிடைக்க இந்த படிவத்தில் உள்ள உங்கள் வங்கி விபரங்கள், ஆதார் கார்டு, பான் கார்டு விபரங்கள் அனைத்தையும் நிரப்பி குறிப்பிட்ட எண்ணுக்கு வாட்ஸ் ஆப்செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து சம்பந்தபட்ட நாப்டால் நிறுவனத்திற்கு காவல்துறை சார்பாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டதில் தங்கள் நிறுவனம் அப்படி ஒரு குலுக்கல் நடத்தவில்லை என்றும், வாடிக்கையாளர்களுக்கு இது போன்று கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்றும் தெரிவித்தது.

எனவே, மாவட்டத்தில் பல பேருக்கு இது போன்று தபால் மூலம் கடிதம் அனுப்பி வங்கி விபரங்களை பெற்று பணத்தை ஏதோ ஒரு கும்பல் மோசடி செய்ய முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, பொதுமக்கள் இது போன்று வரும் கடிதங்களுக்கோ, மொபைலில் வரும் மெசேஜ்களுக்கோ முக்கியத்துவம் அளித்து தங்கள் வங்கி, ஆதார், பான் போன்ற விபரங்களை கொடுக்க வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here