பிரபல சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு அமைப்பான மேக்அபி சமூக வலைத்தள பதிவுகளின் பின்விளைவுகள் பற்றிய ஒரு ஆய்வை இந்தியாவில் நடத்தியது.
அதில் கிடைத்த சுவாரஸ்யமான விஷயங்கள்…
* இந்தியாவில் சரி பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டிப்பாக சமூக வலைத்தள கணக்கு வைத்துள்ளனர். ஆனால் அதை பயன்படுத்தாவிட்டாலும் அதிலிருந்து வெளியேறும் யோசனையில் இல்லை என்று 41 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
* 33.3 சதவீதம் இளைஞர்கள் தனிநபர் பாதுகாப்புக்கான ‘செட்டிங்ஸ்’ வசதிகளை அறிந்திருக்கவில்லை.
* 40 சதவீத இந்தியர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் வேலை நீக்கம் செய்யப்படுவோம் என்று பயம் கொண்டுள்ளதாக தொிவித்துள்ளனர்.
* 31.4 சதவீதம் பேர் சமூக வலைத்தள கருத்துகள் தங்கள் தொழில்வாய்ப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைவதாகவும் கூறி உள்ளனர்.
* 25.7 சதவீதம் பேர் பணி செய்யும் நிறுவனத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக ஒப்புக்கொண்டனர்.
* 21 சதவீதம் பேர் தாங்கள் வெளியிடும் கருத்துகள் தங்கள் வேலை மற்றும் வாழ்க்கையை பாதிக்குமோ என்ற கவலையுடன் தவிர்த்து விடுவதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
* 46.9 சதவீதம் பேர் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை உலகம் ஆகிய இரண்டிற்கும் தொடர்பில்லாமல் பார்த்துக்கொள்வதாக கூறி உள்ளனர்.
* 41.1 சதவீதம் இளம் வயதினர் ஒவ்வொரு சமூக வலைத்தள கருத்தையும் பதிவிடும் முன்பு அதிகம் யோசிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் 45-55 வயதுடையவர்கள் 35 சதவீதம் பேரே கருத்துகளை யோசனையுடன் வெளியிடுகிறார்களாம்.












