தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத்திற்கு தினமும் அரசு மகளிர் விடியல் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பேருந்து சாத்தான்குளம் முதல் “வாழையடி” என்ற கிராமம் வழியாக நாசரேத்தை சென்றடைகிறது. இந்த நிலையில் இந்த பேருந்தில் வாழையடி என்ற பெயருக்கு பதிலாக “வாழயடி” என தவறுதலாக பெயர் டிஜிட்டல் முறையில் பதிவிடப்பட்டுள்ளது. இது தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.







