6 மாதங்களில் சுமார் 6 ஆயிரம் மோசடிகள்

0
624

 

பொதுத்துறை வங்கிகளில் நடந்த மோசடிகள் தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த எழுத்துப்பூர்வமாக பதிலில், கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறே மாதங்களில் சுமார் 6 ஆயிரம் மோசடிகள், அதாவது 5 ஆயிரத்து 743 வங்கி மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொகை மதிப்பில் ரூ.95 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி மோசடிகளைத் தடுப்பதற்காக செயல்பாட்டில் இல்லாத 3 லட்சத்து 38 ஆயிரம் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here