ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் களமிறங்கியிருக்கிறார். இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த எம் எஸ் ஆர் மலையாண்டி நேற்று சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருடன் ‘ ஜல்லிக்கட்டு வேண்டும்” என முழக்கமிட்டவாறே இளைஞர்கள் ஊர்வலமாக வந்தனர்.
இதுகுறித்து உடன் வ ந்த ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க தலைவர் எம்.எஸ்.ராஜாவிடம் கேட்டபோது, ‘ ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு சம்மதித்த போதும், அமைச்சர் சண்முகநாதன் அதை நடக்கவிடாமல் செய்துவந்தார். மேலும், தொகுதியில் எவ்வித நலத்திட்டங்களையும் கடந்த பதவிக்காலத்தில் அவர் நிறைவேற்ரவில்லை. எனவே, ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் எம் எஸ் ஆர் மலையாண்டியை நிறுத்தியுள்ளோம்” என்றார்.