பள்ளி மாணவனிடம் சில்மிஷம் – ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது

0
923


கோவை ஆனைகட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவன் தடாகம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தான். பஸ் கிடைக்காததால் அவ்வழியே சென்ற மினி டோர் ஆட்டோ ஒன்றை நிறுத்தி ’லிஃப்ட்’ கேட்டுள்ளார். ஆட்டோவை ஓட்டி வந்த நபர் பள்ளி மாணவன் நிற்பதைப் பார்த்ததும் ஆட்டோவை நிறுத்தினார். தொடர்ந்த அந்த மாணவனை ஆட்டோவில் முன்பக்க இருக்கையில் தனக்கு அருகில் அமர வைத்துக் கொண்டார்.

பின்னர் ஆட்டோ செல்லச் செல்ல ஆட்டோ டிரைவர் தனது செல்போனை எடுத்து பள்ளி மாணவனிடம் கொடுத்து அதில் உள்ள படங்களை பார் என்று கூறியிருக்கிறார். பள்ளி மாணவனும் ஆர்வமிகுதியால் அதிலிருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தான். அதில் ஆபாச படங்களும் வீடியோக்களும் இருந்துள்ளது. இதை பார்த்துக் கொண்டிருந்த பள்ளி மாணவனிடம் ஆட்டோ டிரைவர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும்
ஆட்டோவை ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்தி பள்ளி மாணவனிடம் தவறாக நடந்துள்ளார்.

அத்துடன் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறிவிட்டு அந்த மாணவனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று விட்டார். மாணவன் பள்ளிக்கு வர தாமதமானதால் பள்ளியின் தலைமை ஆசிரியர் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது பள்ளி மாணவன் தனக்கு நடந்த விஷயங்களை அவரிடம் கூறி உள்ளான். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் அந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு வரச்செய்தார்.

நடந்த விவரங்களை எடுத்துக் கூறியதை அடுத்து மாணவனின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் .இதையடுத்து பள்ளி மாணவனிடம் ஆபாச படங்களை காட்டி சில்மிஷம் செய்த நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த தெக்கு பாளையத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி( 40) என்பவரை போக்சோ சட்டத்தின் கழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here