வள்ளியூர் அருகே கள்ளி குளத்தில் கணவனை மண்ணெண்ணை யால் ஊற்றி எரித்த மனைவி கைதானார்.
கள்ளி குளத்தை சேேர்ந்தவர் பாக்கியராஜ்(59). இவர் தனது சொத்துக்களை தனது மகன்களுக்கு எழுதி வைப்பதற்காக நிலத்தை அளவீடு செய்துள்ளார் .இதற்கு அவரது மனைவி மரிய லீலா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.ஆனாலும் பாக்கியராஜ் தன் முயற்சியை தொடர்ந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மரிய லீலா அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து மரிய லீலாவை வள்ளியூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








