கோழி வாங்குவதுபோல் பெண்ணிடம் நகை பறித்த இருவர் கைது

0
663

கோவை இடையர்பாளையம் அருகே டி.வி.எஸ் நகர் கணேஷ நகரை சேர்ந்தவர் ஜோஸ்( 60) சமையல் வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி அல்போன்ஸா(51) வீட்டு மொட்டை மாடியில் கோழி,புறா வளர்த்து வருகிறார்.இங்கு  ஒருவர் வந்து கோழி பார்த்து விட்டு நாளை வந்து வாங்குவதாக சொல்லி கணவர் போன் நம்பரை வாங்கி சென்றார். அவருக்கு போன் செய்து சமையல் ஆர்டர் இருப்பதாகவும் வடவள்ளி வரச் சொல்லி போன் செய்துள்ளார்.

ஜோஸ் அங்கு சென்றவுடன் மதியம் அல்போன்ஸாவிடம் வந்து கோழி வாங்குவதாக கூறி மாடிக்கு சென்றனர். கோழி பார்ப்பது போல் திடீரென்று அல்போன்ஸாவை தாக்கி வாயை பொத்தி துணியால் கட்டி அவர் கழுத்தில் இருந்த 5 1/2 பவுண் நகையை பிடிங்கி சென்று விட்டார்.பின்னர் கயிறை அவிழ்த்து அவர் சத்தம் போட்டுள்ளார்.இது குறித்து துடியலூர் போலிஸில் அல்போன்ஸா கொடுத்த புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் வாகன சோதனையில் இருவர் பிடிபட்டனர்.அவர்களிடம் விசாரித்த போது இடையர்பாளையத்தில் பெண்ணிடம் நகை பிடுங்கி சென்றவர்கள் என்பது தெரிந்தது. திண்டுக்கல் வேடசத்தூரை சேர்ந்த காளீஸ்வரன்(29),மற்றும் கோவை சுண்டப்பாளையம் அஜ்ஜனூரை சேர்ந்த கணேசன்(31) என்றும் தெரிந்தது. பிடுங்கிய நகையை திண்டுக்கல்லில் அடமானம் வைத்து இருவரும் ஜாலியாக செலவு செய்துள்ளனர். போலிஸார் நகையை கைப்பற்றி இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.அவர்கள் பொள்ளாச்சி சப்.ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here