கொரோனா பிரச்சினை ஒருபுறம் என்றால், குடிநீர் பிரச்சினை மறுபுறம் தமிழ்நாட்டை தாக்கிவருகிறது.
இந்நிலையில், ராணிப்பேட்டையை அடுத்த கல்மேல்குப்பம் மலைக்கிராம பகுதியில் கடந்த மூன்று வருட காலமாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் சரியாக நீர் விநியோகம் இல்லாததால் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அம்மூர் லாலாப்பேட்டை சாலையில் குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட அவர்களிடம் சமாதானம் பேசிய அதிகாரிகள், கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறியதையடுத்து குடங்களுடன் புறப்பட்டு சென்றனர்.













