உடன்குடியில் பெண்னை தாக்கியதாக பிரபல நடிகர் உடன்குடி ஜி.பி.முத்து உட்பட 4 பேர் மீது குலசை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உடன்குடி பெருமாள்புரம் கூளத் தெருவைச் சேர்ந்த முத்து மகேஷ் (48) கடந்த 2ஆம் தேதி மாலை தெருவில் தனது மோட்டார் பைக்கில் சென்ற போது அப்பகுதியை சேர்ந்த சின்னத்திரை, பிக்பாஸ் மூலம் பிரபலமானவரும் தற்போது திரைப்படங்களில் நடித்து வருபவருமான ஜி.பி.முத்துவின் மகன்கள் சைக்கிளில் இருபக்கமும் சென்றுள்ளனர்.
ஏன் ரோட்டின் இருபுறமும் சைக்கிள் ஒட்டுகிறீர்கள். ஒரு புறம் மட்டும் ஓட்டுங்கள் என்று முத்து மகேஷ் கூறியுள்ளார். இது குறித்து அவரது மகன்கள் நடிகர் ஜி.பி.முத்துவிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜி.பி.முத்து, அவரது மனைவி அஜிதா, தம்பி இசக்கிமுத்து மனைவி அனிதா,தந்தை கணேசன் ஆகிய 4 பேரும் முத்து மகேஷ் வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்ததாகவும், முத்து மகேஷ்யை வெளியே அழைத்ததாகவும் கூறப்படுகிறது. அவர் வெளியே வராததால், அவர் மனைவி பால அமுதாவை 4 பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அவரது தலை மற்றும் கை, வாயில் காயம் ஏற்பட்டு உடன்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்கை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பால அமுதா கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸார் நடிகர் ஜி.பி.முத்து உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.









