கோவை மில்லில் ஜார்கண்ட் இளம்பெண் மீது தாக்குதல்

0
947


கோவை சின்னவேடம்பட்டி அடுத்த உடையாம்பாளையம் சாமியான் தோட்டத்தைச் சேர்ந்த ஆறுச்சாமி என்பவரது மகன் சோமசுந்தரம் ( 65 ) கற்பகம் மில் என்ற பெயரில் ஸ்பின்னிங் மில் நடத்திவருகிறார்.
இந்த மில்லில் ஜார்கண்ட், வெஸ்ட் பெங்கால், ஒரிசா, அசாம், திரிபுரா போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த 60 பெண்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 பெண்களுமாக மொத்தம் 120 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் மில்லுக்கு அருகாமையில் தங்கும் விடுதி உள்ளது . விடுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 17 பெண்கள் தனியாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் என்னும் இடத்தைச் சேர்ந்த கிருஷ்ணா கேம் ராம் என்பவரது மகள்சோம்பாரி வயசு(18)என்பவர் பணிக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.

அப்போது பெண்கள் விடுதியில் வார்டன்களாக பணிபுரிந்து வரும் உடையார் பாளையத்தைச் சேர்ந்த அச்சுதன் மனைவி லதா (40), மயிலாடுதுறையை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி காயத்ரி (43) மற்றும் அங்கு ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் உடையாம்பாளையத்தை சேர்ந்த முனியம்மாள்(45 ) ஆகியோர் சோம் பாரியிடம் விசாரித்துள்ளனர்

அப்போது லதாவை சோம்பரி கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது இதில் கால் விரலில் காயம் அடைந்த லதா மில்லில் பணி புரியும் மனிதவள மேம்பாட்டு துறை அலுவலர் விளாங்குறிச்சி யைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது மகன் முத்தையா ( 46)விடம் புகார் தெரிவித்துள்ளார்.

சோம்பாரிபின் அறைக்கு வந்த முத்தையா விசாரணை மேற்கொண்டு சோம் பாரியை பிரம்பால் தாக்கியுள்ளார். இதனையடுத்து அங்கு வேலை செய்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்

இதில் பிரம்பால் அடித்த காட்சியை செல்போனில் படம் பிடித்த அங்குள்ள பெண்கள் நம்ம முத்தூர் என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அதை வைரலாக்கினர்.

இதனை அறிந்த ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத்தலைவர் ஸ்டெல்லா மேரி சைல்டு வெல்பேர் கமிட்டிக்கு புகார் அளித்ததைத் தொடர்ந்து சைல்டு வெல்ஃபேர் கமிட்டி அதிகாரிகள் மேற்படி கற்பகம் மில்லுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வட மாநில பெண்ணை பிரம்பால் அடித்தது உண்மை என்று தெரிந்ததையடுத்து, சைல்டுவெல் ஃபேர் கமிட்டி அதிகாரிகள் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். தொடர்ந்து சரவணம்பட்டி காவல்தறையினர்

முத்தையா மற்றும் லதா காயத்ரி ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here