தென்காசியில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தல் 2லாரி பறிமுதல்

0
560

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் மணல் கடத்துவதாக இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் துணை வட்டாட்சியருடன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் வாகன சோதனையில் ஈடுபட்ட போது ,
எம் சாண்ட் கொண்டு செல்வதற்கு ஆவணங்களை வைத்து கடையநல்லூர் பகுதியில் ஒரு லாரியில் மணல் கடத்தி வந்துள்ளனர். லாரியை பறிமுதல் செய்து லாரி டிரைவர் மைதீன் (41 .) என்பவரை கைது செய்தனர்.


அதேபோல், விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் இருந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு லாரி மூலம் மணல் கடத்தி வந்த வாகனத்தை ஓட்டி வந்த லாரி டிரைவர் திருநாவுக்கரசு வயது 31 .இவர்கள் இருவரையும் கைது செய்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இங்கிருந்து சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு மணல் கடத்தல் நடைபெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here