தமிழகத்தில் கடந்த 10ந்தேதி முதல் முழு ஊரடங்கு ஊரடங்கு காரணமாக மதுக் கடைகளுக்கு சீல்வைக்கபட்டுள்ளது. ஆனாலும், ஆங்காங்கே மது விற்பனை நடக்கிறது.
நெல்லை மலையாளமேட்டை அடுத்த மலையப்பபுரம் பகுதி வயல்வெளிகளில் மதுப்பாட்டில்கள் புதைக்கபட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து மது விலக்கு காவல்துறை ஆய்வாளர் முத்துலெட்சுமி தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் மதிப்பிலான 600 மதுப் பாட்டில்களை கைப்பற்றினர். டவுண் கோடிஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்த பீர்மைதீன் என்பவரையும் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
இதுவரை ஒரே வாரத்தில் நெல்லை மாநகர மது விலக்கு போலீசார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான மூன்றாயிரம் மதுபாட்டில்களை கைப்பற்றியுள்ளனர்.









