சாத்தான்குளம் அருகே மணிநகர் ஒயின்ஷாப் பகுதியில் தட்டார்மடம் காவல் உதவி ஆய்வாளர் பொன்னுமுனியசாமி தலைமையிலான போலீசார் நேற்று (செப்டம்பர் 18) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட முத்துப்பாண்டி மற்றும் இசக்கி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 247 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.









