ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 21 ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். 27 ஆம் தேதி வரை அமெரிக்காவில் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடி பயணிக்கும் விமானம் நியூயார்க்கிற்கு செல்லும் போது பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக செல்ல அந்நாட்டிடம் இந்தியா முறைப்படி அனுமதி கோரியது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் விமானம் தங்கள் நாட்டின் வான்பரப்பில் செல்ல அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.