கஞ்சா விற்போர், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை – ஐஜி அஸ்ரா கர்க் எச்சரிக்கை

0
1023

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் சட்ட ஒழுங்கு நிலை , கஞ்சா விற்பனைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தூத்துக்குடியில் இன்று கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார் .

இதில், திருநெல்வேலி காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் திருநெல்வேலி மாவட்டம் சிலம்பரசன், தென்காசி மாவட்டம் சாம்சன், தூத்துக்குடி மாவட்டம் பாலாஜி சரவணன் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் ஹரிகிரன் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள்;

இந்த ஆண்டு இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 44 குற்றவாளிகளும், தென்காசி மாவட்டத்தில் 33 குற்றவாளிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 65 குற்றவாளிகளும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 27 குற்றவாளிகளும் ஆக மொத்தம் திருநெல்வேலி சரகத்தில் 169 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 603 ரவுடிகள், தென்காசி மாவட்டத்தில் 299 ரவுடிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் 800 ரவுடிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 554 ரவுடிகள் ஆக மொத்தம் திருநெல்வேலி சரகத்தில் 2256 ரவுடிகள் மீது நிர்வாகதுறை நடுவர் மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் இதுவரை திருநெல்வேலி மாவட்டத்தில் 29 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 60 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 13.704 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 43 குற்றவாளிகளது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 86 கஞ்சா குற்றவாளிகளிடமிருந்து நிர்வாக நீதிபதி அவர்கள் மூலம் நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் 14 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் 28 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 71 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 16.501 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 37 குற்றவாளிகளது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 116 கஞ்சா குற்றவாளிகளிடமிருந்து நிர்வாக நீதிபதி அவர்கள் மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் 8 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 42 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 76 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 15.232 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 40 குற்றவாளிகளது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 246 கஞ்சா குற்றவாளிகளிடமிருந்து நிர்வாக நீதிபதி அவர்கள் மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் 01 கஞ்சா வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 63 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 13.579 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 27 குற்றவாளிகளது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 123 கஞ்சா குற்றவாளிகளிடமிருந்து நிர்வாக நீதிபதி அவர்கள் மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் 06 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற ரவுடி மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல காவல்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.

.

.

.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here