திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் – விஜய் மாநாட்டு பேச்சு

0
809

விஜய் பேச அழைக்கப்பட்டதும்,
மேடையின் கீழே அமர்ந்திருந்த தாய் தந்தையிடம் ஆசியை பெற்றுக்கொண்ட விஜய், சக நடிகர்களிடம் கைகுலுக்கினார்.பின்னர் பேசுகையில்,’ ஒரு குழந்தை முதல் முதல் அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் அம்மாவிற்கு ஒரு சிலிர்ப்பு வரும் பாருங்கள். அந்த சிலர்ப்பை எப்படி இருந்தது என்று கேட்டால் அந்த அம்மாவால் விளக்கிச் சொல்ல முடியும். அந்த குழந்தை எப்படி சொல்லும்? எப்படி சொல்லத் தெரியும். எதைக் கேட்டாலும் வெள்ளந்தியாக சிரிக்க மட்டும் தானே தெரியும். அதே அது உணர்ந்த உணர்வை சிலாகித்து வார்த்தையிலே சொல்லுகின்ற அளவிற்கு குழந்தைக்கு வார்த்தை இல்லை அதே உணர்வுடன் உங்கள் முன்பு நிற்கிறேன்.


அதே அந்த குழந்தை முன்பு ஒரு பாம்பு படம் எடுத்து நின்றால், தன் அம்மாவை பார்த்து சிரித்த அதே சிரிப்போடு, கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அந்த பாம்பை கையில் பிடித்து கொண்டு வரும். குழந்தைக்கு பாம்பை கண்டால் பயம் இல்லையா என்று கேள்வி வரும். அந்த பாம்பு தான் அரசியல். அதை கையில் பிடித்து விளையாட ஆரம்பிப்பது தான் உங்க உங்க ( சிறிது நேரம் நிறுத்தி) அரசியலுக்கு நாம குழந்தை தான் இது அடுத்தவங்களோட கமெண்ட். ஆனால் பாம்பு என்றாலும் பயம் இல்லை என்பது தான் நம்முடைய கான்பிடன்ட் அரசியல் கொஞ்சம் சீரியஸாக தானே இருக்கும்? சீரியஸ் நஸ்சோடு சிறிது சிரிப்பையும் கலந்து செயல்படுவது தான் நம்முடைய வாணி. அப்படி செயல்பட்டால் தான் இந்த பீல்டு நிலைத்து நிற்க முடியும் எதிர் நிற்பவரை எதிர்கொள்ள முடியும்.

உணர்ச்சிகரமான இந்த தருணத்தில் மேடை ஃபார்மாலிட்டியை மறந்து விட்டு சாரி, என்று கூறிவிட்டு, பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களே,.
என்றெல்லாம் கூறிவிட்டு,…எதற்கு இந்த அவர்களை இவர்களை எல்லாம்? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையை வைத்துக் கொண்டு ஏன் பிரித்துப் பார்க்க வேண்டும்? மேடையில் இருந்தாலும் மேடைக்கு முன் இருந்தாலும் நீங்களும் நாங்களும் ஒன்று தான்.

என் நெஞ்சில் குடியிருக்கும் உங்களுக்கு என்னுடைய உயிர் வணக்கங்கள், உயிர் வணக்கங்கள், உயிர் வணக்கங்கள். இதுவரை ஆடியோ லாஞ்சில் மீட் பண்ணினோம். இப்போது அரசியல் மேடையில் சந்திக்கிறோம்.

அரசியல் மேடை என்றால் கோபத்தில் கொந்தளிக்க வேண்டும் என்பதெல்லாம் நமக்கு செட்டாகாது. பட்டென்று பேசும் பாயிண்ட்டுக்கு வந்து விட வேண்டும். சயின்ஸ் டெக்னாலஜி தான் டெவலப் ஆக வேண்டுமா, பாலிடிக்ஸ் டெவலப் ஆகக்கூடாதா? மாறனும் இந்த நியூ வேர்ல்ட் மாத்திடும்.


இன்னிக்கி இருக்கிற ஜெனரேஷனை புரிந்து கொண்டால் எதையும் எளிதாக முன்னெடுத்து முடிக்க முடியும். இந்தப் புள்ளி விவரம் புலியாக நாம் கதறப்போவதில்லை. வேல்டு ஹிஸ்டரி வேல்டு லிட்ரேச்சர் என்று பேசப்போவதில்லை. ஆல்ரெடி இருக்கின்ற அரசியல்வாதிகளை அதிகமாக பேசிய நேரத்தை வீணடிக்க போவதில்லை. அதுக்காக மொத்தமாக கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதுமில்லை. ( சற்று பேப்பர் குறிப்பை பார்க்கிறார் )

இப்ப என்ன தேவை, இப்ப என்ன பிராப்ளம் அதுக்கு என்ன சொலுஷன் என்று யோசித்தால் போதும். அதை மக்களிடம் எடுத்துச் சொன்னால் போதும் மக்களுக்கு நம் மீது கான்ஃபிடன்ட் வரும். நம்ம வழிகாட்டியாக இருப்பவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் தான். எஸ், பகுத்தறிவு தந்தை பெரியார். என்ன உங்களுக்கு கொள்கை தலைவர் பெரியாரா என்று ஒரு கும்பல் பெயிண்ட் டப்பாவை தூக்கிக் கொண்டு கிளம்புவார்கள். ஆம் பெரியார் எங்கள் கொள்கை தலைவர். எப்படி, ஏன்? பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை நாங்கள் கை வைக்க போவதில்லை. யாரோட கடவுள் நம்பிக்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அரசியல் அண்ணன் தம்பி உறவை வெளிப்படுத்திய அண்ணா போல் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
ஆனால் பெண் கல்வி பெண் முன்னேற்றும் சமூக சீர்திருத்தம் போன்றவற்றில் பெரியார் சொன்னதை முன்னெடுக்கப் போகிறோம்.

அடுத்து நமது கொள்கை தலைவர் பச்சைத் தமிழர் காமராசர். பெருந்தலைவர் காமராசர் மதச்சார்பின்மைக்கும் நேர்மைக்கும் முன்னுதாரணமாக இருந்தார் அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளப் போகிறோம். அண்ணல் அம்பேத்கர் – இந்தியாவில் இந்த பெயரை கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும் சாதியை ஒடுக்கு முறையையும் ஒழிக்கப் போராடியவர்.
பெண்களைக் கொள்கை தலைவிகளாக ஏற்று முதலில் களத்திற்கு வருவது நம்முடைய தமிழக வெற்றி கழகம் தான். அப்படி கொள்கை வழிகாட்டிகளாக மண்ணைக் கட்டி ஆண்ட வேலு நாச்சியார், சொந்த வாழ்க்கையோட சோகத்தை மறந்து வாழையும் வேலையும் வேண்டி போர்க்களத்தில் புகுந்தவர். இன்னொருத்தர் முன்னேறத் துடித்த சமூகத்தில் பிறந்து இந்த சமூகம் பின்தங்கி விடக் கூடாது என்று சுதந்திர போராட்டத்தில் இறங்கி போராடிய அஞ்சலை அம்மாள்.

மை டியர் ஃப்ரெண்ட்ஸ், நம்மை பார்த்து யாரும் விசில் அடித்தான் குஞ்சு என்று சொல்லி விடக்கூடாது. நம்முடைய கொள்கை வழிகாட்டிகளை மனதில் நிறுத்தி நாம் செயல்படுவதை பார்த்து வியக்க வேண்டும். சொல்லல்ல செயல் செயல் தான் முக்கியம். நோ காம்பரமைஸ் இன் அவர் பொலிடிக்கல் வார். அதற்காக நாம் வெறுப்பு அரசியலை கையில் எடுக்கப் போவதில்லை. எதற்காக வந்திருக்கிறோமோ அதை கொஞ்சமும் பிசிர் இல்லாமல் செய்து முடிப்போம். என்ன தோழா, என்ன தோழி?

இந்த அரசியல் எல்லாம் நமக்கு எதுக்குங்க நாமலாக நடித்தோமா நாலு காசு பார்த்தோமோ என்று தான் இருந்தேன். ஆனால் அப்படி நினைப்பது சுயநலம் இல்லையா நாமே வாழவைத்த மக்களுக்காக நாம் ஏதாவது செய்யாமல் இருந்தால் விசுவாசமாக இருக்குமா என்றெல்லாம் ஏகப்பட்ட கேள்விகள் மனதிற்குள் வந்து கொண்டே இருந்தது. இதற்கான விடையை கண்டுபிடிக்க யோசித்தபோது தான் விளக்கம் கிடைத்தது. பூதம் போல் பல பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது. இறங்கி அடித்தால் தான் நம்பியவர்களுக்கு நல்லது செய்ய முடியும் அதுதான் இறங்கியாச்சு இனி எதைப் பற்றியும் யோசிக்க கூடாது. நாம் யார் என்பதை எல்லாம் சொல்லில் காட்டக் கூடாது செயலில் காட்ட வேண்டும்.

அடுத்து நாம் என்ன ஸ்டாண்ட் எடுக்க போகிறோம் என்பது தான் மிகவும் இம்பார்ட்டன்ட். அப்படி ஒரு கரெக்டான ஸ்டாண்ட் எடுத்து விட்டாலே நம் எதிரிகள் அஞ்சுவார்கள். எதிரி இல்லாமல் வெற்றி வேண்டுமானால் இருக்கலாம் களம் இருக்க முடியாது. நாம கட்சி அனௌன்ஸ் பண்ணிய போதே நம் எதிரி யார் என்பதை டிக்ளர் செய்து விட்டோம். இங்க கொஞ்சம் கதறல் சத்தம் கேட்க ஆரம்பித்தது. இதோ இந்த மாநாட்டில் ஓபன் ஆக அறிவித்த பின்பு அந்த கதறல் இன்னும் இன்னும் அதிகமாகத்தான் போகும்.

நம்முடைய இயல்பான அடிப்படையான கோட்பாடு மதம் சாதி ஏழை பாலை நம் பிளவுவாதம் தான் எதிரியா? நமக்கு ஒரே எதிரி தானா? இன்னொரு எதிர் இருக்கிறதே ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை எதிர்ப்பது..
ஊழலோடையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அது ஒரு வைரஸ் போல் வளர்ந்து கொண்டிருக்கிறது.

பிளவுவாத சக்தியை கூட கண்டுபிடித்து விடலாம். அது மதம் பிடித்த யானை போல் தன்னை காட்டி கொடுத்து விடும். ஆனால் கரக்சன் எங்கு ஒளிந்து இருக்கிறது? எப்படி ஒளிந்து இருக்கிறது எந்த ஃபாமில் ஒளிந்து இருக்கிறது எனக்கு தெரியாது.

அதற்கு முகம் இருக்காது முகமூடி தான் முகமே. நம் கூட இருந்துகொண்டு நம்மையே ஆண்டு கொண்டும் இருக்கிறார்கள்.

நம்ம மக்களுக்கு தெளிவாக தெரியும் யார் இங்கு வரவேண்டும் யார் இங்கு வரக்கூடாது என்று. இங்கு இந்த கிறிஸ்தவர் முஸ்லிம் என்பது வழிபாட்டுத்தளத்தில் தான் இருக்கும் ஆனால் வெளியில் வந்து விட்டால் ஒற்றுமையாக இருக்கும். இங்கு சாதி இருக்கும் சைலண்டாக இருக்கும்.

திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு அண்ணா பெரியார் பெயரை வைத்துக்கொண்டு இருப்பவர்கள் தான் பொலிட்டிக்கல் எதிரி. திராவிடத்தையும் தமிழ் தேசிய அரசியலையும் பிரித்துப் பார்க்கப் போவதில்லை திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள். எதற்குள்ளும் நம்மை சுருக்கிக் கொள்ளாமல் தமிழ்நாட்டு மக்களுக்காக மதச்சார்பற்ற சமூக சம நீதி கொள்கையை அடையாளமாக முன் நிறுத்தி செயல்பட போகிறோம்.

எதிரிகள் யார் என்று சொன்னால் மட்டும் போதுமா? அதுதான் ஒரு அரசியலா? மக்களோடு மக்களாக களத்தில் இருப்பதுதான் எங்களது நிரந்தர அரசியல் பாதை. நல்ல ரிசல்ட் கொடுக்கும் திட்டங்களை தீட்ட வேண்டும். அதனை அமல்படுத்த வேண்டும். சோறு சாப்பிட்டால் தான் பஸ் யாரும் சோறு என்ற வார்த்தையை சொன்னால் பசி ஆறாது. பிராக்டிக்கலாக ஒர்க் ஆகக்கூடிய பிளான் ஆக இருக்க வேண்டும். மீன் பிடிச்சு கொடுக்கக் கூடாது அது தப்பு. மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சிலர் சொல்லிக் கொண்டு திரிவார்கள். முடிந்தவர்கள் மீன்பிடித்து வாழட்டும். முடியாதவர்களுக்கு நாங்கள் மீன் பிடித்து கொடுப்போம்.

மாற்று அரசியல் மாற்று சக்தி என்று ஏமாற்றப் போவதில்லை. பத்தோடு பதினொன்றாக இருந்து கொண்டு இன்னொரு மாற்று சக்தி என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றன. நாட்டுக்கு கேடு செய்கின்ற எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா வேலை செய்கின்ற ஏமாற்று சக்திகள் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்கின்ற முதன்மையான சக்தியாக இருந்து கொண்டு உங்களது அண்ணனாக தம்பியாக, மகனாக இருந்து கொண்டு உழைப்பேன். பொலிட்டிக்கல் டிசிசன் பொலிடிக்கல் டிகோரத்தொடு உழைப்பேன். இது சொசைட்டிக்காக வாலேந்து வந்த கூட்டம். இது மாஸ் கேதரிங், நாட் பார்க்க கேஷ்.

சோசியல் மீடியாக்களோடு ஆபாச சில்லு ஏடிஎம் பி டி எம் என்று போய் பிரச்சாரம் செய்வது என்று கனவு காண வேண்டாம். இங்கே பார்க்கிற இவங்க மட்டும் தான் நம் சொந்த பந்தம் என்று நினைத்து விடாதீர்கள். நம்முடைய சொந்தம் உறவு நட்பு இன்னும் இருக்கிறார்கள். இங்கு வராமல் தமிழ்நாட்டில் அக்கம் பக்கத்தில் மாநிலங்கள் இருக்கின்ற உறவுகள் இருக்கிறார்கள். யாராவது வந்து விட மாட்டார்களா? ஏதாவது நல்லது செய்து விடமாட்டார்களா என்று ஏக்கத்துடன் இருக்கிற மக்களை ஏமாற்றுகிறவர்களை சனநாயகர் போர்க்களத்தில் சந்திக்கின்ற நாள் வெகு தூரத்தில் இல்லை…..இப்படிங்கிறதுக்குள் வந்து விடும். அன்னைக்கு அந்த நாள்ல அந்த தேதியில் 234 தொகுதிகளிலும் டி வி கே சின்னத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அணுகுண்டாக இருப்பார்கள்.

ஒரு கூட்டம் கொஞ்ச காலமாக ஒரே பாட்டை பாடிக்கொண்டு, யார் வந்தாலும் குறிப்பிட்ட கலரை பூசிக்கொண்டு ஒரே பாட்டை பாடிக் கொண்டு பூச்சாண்டி காட்டிக் கொண்டு ஆனால் அவர்கள் மட்டும் அண்டர் கிரவுண்ட் டிலிங் போட்டுக் கொண்டு, எப்போது பார்த்தாலும் பாசிசம் பாசிசம் தான். பிரிவினை காட்டிக் கொண்டு சீன் போடுவது தான் வேலையாக இருக்கிறது. இனி நீங்க எந்த கலர் பூசினாலும் மோடி மஸ்தான் வேலை பார்த்தாலும் ஒன்று நடக்கப் போவதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here