கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் போத்தனூர் ரோட்டில் உள்ள 3 திருமண மண்டபங்கள் அரசின் கொரோனாதடுப்பு விதி முறைகளை பின்பற்றாமல் செயல்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர்.
இதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்த 2 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், ஒரு திருமண மண்டபத்திற்கு ரூ.2 ஆயிரமும் என 3 திருமண மண்டபங்களுக்கும் மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.











