டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் வருண் அரோரா (33). இன்று பகல் 2.50 மணியளவில் கோவையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பயணம் செய்ய கோவை விமான நிலையம் வந்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் இருந்த பார்சலில் வெடி மருந்து போன்ற பொருள் இருந்துள்ளது. உடனே அருண் அரோரா பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் வருண் அரோரா கூறும் போது, தான் 2 கிலோ தங்க மண், இரிடியம் கலந்த பொருளை ஒருவரிடம் வாங்கிய தாகவும், அதை பரிசோதிக்க கொச்சிக்கு வந்ததாகவும், கொச் சியில் உறுதி செய்யப்படாததால் கோவை பெரியகடை வீதி யில் பரிசோதித்துவிட்டு கோவையில் இருந்து டெல்லி புறப்பட முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி தொழில் அதிபரிடம் 10 கிராம் அளவில் வெடிமருந்து இருந்தது. மற்றவை உலோக துகள்கள் என்பதால் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.













