தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது போல தமிழ்நாடு முதல்வருக்கு covid-19 காலச் சூழலுக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை நியமித்து நிதித் துறை மூலம் தமிழ்நாடு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த உத்தரவில் covid-19 பாதிப்பு சூழ்நிலையில் தமிழ்நாடுஇக்கட்டான பொருளாதாரச் சூழலில் இருப்பதாகவும் மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாகவும், விரைவான பொருளாதார வளர்ச்சி சமூக நீதி சமத்துவத்தை அடைகின்ற திட்டங்கள் தீட்டுவதற்கு சிறந்த பொருளாதார ஆலோசனைக் குழு தேவைப்படுவதால் தமிழ்நாடு பொருளாதார நிலை இந்திய பொருளாதார நிலையோடு மிகவும் நெருக்கமாக உள்ள நிபுணர் குழுவை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது
இக்குழுவில் அமெரிக்கா மாச சூட் தொழில்நுட்ப நிறுவன வறுமை ஒழிப்பு பொருளாதார மேம்பாட்டு பேராசிரியர் எஸ்தர் டப் லோ, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் முன்னாள் இந்தியபொருளாதார தலைமை ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ராஞ்சி பல்கலைக்கழக வருகைதரு பேராசிரியர் ஜீன் டிரேஸ், தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் நாராயன் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
இந்தக் குழுவுக்கு தமிழ்நாடு நீதித்துறை செயலகமாக இருக்கும் அத்துறையின் கூடுதல் தலைமை செயலர் கிருஷ்ணன் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.