ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கத்திரி மலையில் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது
இந்த பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்
இங்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கத்தரி மலைக்கு செல்ல கொளத்தூர் வழியாக சென்று மலைப்பாதை வழியாக செல்லவேண்டும்
கொளத்தூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கத்திரி மலைக்கு செல்ல வேண்டுமென்றால் மலைப்பாதையில் நடந்தே தான் செல்ல வேண்டும்
இந்நிலையில் அங்கு தங்கி பணிபுரிந்து வந்த ஆசிரியர் குணசேகரன் என்பவருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது
இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் தொட்டில் கட்டி கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஆசிரியரை மலைவாழ்மக்கள் தொட்டில் கட்டி தூக்கி வந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது











