திசையன்விளை அருகே குளத்தில் குளித்த 8 வயது சிறுவன் பலி

0
484

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதிலிருந்து யாரோ உறிஞ்சியை திறந்து விட்டுள்ளனர். இந்நிலையில், அவ்வூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் விக்னேஷ் (8) என்ற 3ஆம் வகுப்பு மாணவர் குளத்துக்கு சக நண்பர்கள் 3 பேருடன் குளிக்கச்சென்றுள்ளார்.

உறிஞ்சி அருகே குளித்துக்கொண்டிருந்தபோது நீர் அவரை இழுத்துச்சென்றது. அதில் மூழ்கி மயக்கமடைந்தார். உடன் குளித்துக்கொண்டிருந்த நண்பர்கள் சத்தம் எழுப்பியதும் பெரியவர்கள் வந்து விக்னேஷை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். திசையன்விளை மருத்துவமனையில் முதலுதவி செய்துவிட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் அவர் இறந்தார்.

இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here