நம்பியாற்றில் ஜேசிபி மூலம் துணிகர மணல் திருட்டு

0
783

தாமிரபரணிக்கு அடுத்தபடியாக நம்பியாற்றில் மணல் கொள்ளை அதிகம் நடக்கும். கடந்த சில மாதங்களாக விவசாயிகள் விழிப்புணர்வு காரணமாக மணல் திருட்டு நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக உறுமன்குளம் அருகே பொக்லையின் மூலம் துணிகரமாக மணலை அள்ளி லாரிகளில் கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் காவல், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என வட்டாரப் பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here