நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

0
537

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:-வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 24 மணி நேரத்திற்கு பிறகு மழையின் தாக்கம் குறையும்.

ஆந்திராவின் வடக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி கர்நாடகா நோக்கி சென்றதால், மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாக வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here