ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான திமுக தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10. 30க்கு உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. அதன்படியே பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்றவற்றில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையொட்டி இன்று அறிவிக்கப்பட்ட படி வேட்பு மனு பெறப்படவில்லை. நீதிமன்றம் தீர்ப்புக்கு பின்பு புது அறிவிக்கை வெளியிடவேண்டியிருப்பதால், வேட்பு மனு தொடர்பான கால அட்டவணை மாறும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுதும் படித்தபின்பு அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்தார்.