சென்னை மதுரை ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கீழ்க்கரை வாலிபர் கைது

0
492

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் மதுரை ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக குறுஞ்செய்தி ஒன்று ரயில்வே போலீசாருக்கு கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து ரயில்வே போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்த புது மாயாகுளத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் சரவணகார்த்திக் என்பது தெரியவந்தது.

ரயில்வே டிஎஸ்பி கருணாகரன் தலைமையிலான படையினர் புது மாயா குளத்திற்கு சென்று நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் சரவணகார்த்திக் என்பதும் அவர் பிடெக் படித்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர் என்பதும் தெரிய வந்த நிலையில் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here