3 தேசிய விருதுகளை வென்ற அந்தாதுன் இந்தி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய நடிகர் தியாகராஜன் ரீமேக்கில் தனுஷ் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அதில் தன் மகன் பிரசாந்த்தை நடிக்க வைக்கிறார். இதற்காக நடிகர் பிரசாந்த் தனது உடல் எடையை 20 கிலோ குறைத்துள்ளாராம்.
பிரசாந்த்துக்கு நன்றாக பியானோ வாசிக்கத் தெரியும் என்பது கூடுதல் தகுதியாகும் காரணம் அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மான் குரானா பார்வையற்ற பியானோ கலைஞராக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிரசாந்த்தை வைத்து ஜானி கத்தார் படத்தை ஜானி என்கிற பெயரில் ரீமேக் செய்தார் தியாகராஜன். அந்த படம் வந்த இடம் தெரியாமல் போய் விட்டது. இந்நிலையில் தான் தியாகராஜன் அந்தாதுன் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார்.