குரோவர் பிடிபட்டார்

0
1323

கிருஷ்ணகிரி பகுதி வனக்கிராமப் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக இரு யானைகள் நடமாடின. அவற்றுக்கு குரோவர், மார்க் என பெயரிடப்பட்டது. இவை கெலவரப்பள்ளி ஓடையில் குளித்து அருகில் இரையுண்டு வந்தன. ஆனாலும், இந்த யானைகள் தாக்கி 5 பேர் வரை பலியானதால் வனத்துறையினர் அதைப்பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
முதலில் வெடி வைத்து விரட்டினர். மீண்டும் வந்ததல பரணி, மாரியப்பன் என இரு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன. நேற்று சாணமாவு வனப்பகுதியில் குரோவர் சிக்க, 3 மயக்க மருந்து ஊசிகளை செய்து மயங்கடித்தனர். பின்னர் பொக்லைன் மூலம் லாரியில் ஏற்றி முதுமலை அடர்காட்டுப்பகுதிக்கு கொண்டுசென்றனர்.
குரோவரை பிரிந்த மார்க் கண்காணிக்கப்படுவதாக மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here