உடன்குடி பத்திரப்பதிவு அலுவலக இடமாற்றம் : ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

0
571

உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடன்குடி பத்திரப்பதிவு அலுவலக இடமாற்றம் எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் ஆஸாத், வே.ஆறுமுகம் வேகுணசிலன், ரவி மற்றும் நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

உடன்குடியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சார் பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வாடகை கட்ட டத்தில் இயங்கி வந்த அலுவலகம் சொந்த கட்டடத்தில் இயங்குவதற்கு முயற்சிகள் மேகொள்வதில் தவறில்லை.

ஆனால் ஒரு தனியாரின் 13.5 ஏக்கர் சொத்து பல ஆண்டு காலமாக விற்பனை இல்லாமல் இருக்கவே புரோமோட்டர்கள் தங்கள் சொத்தின் மதிப்பு அதிகரிக்க வேண்டும் என திட்டமிட்டு 20 சென்ட் நிலத்தை பத்திர பதிவு துறைக்கு தானமாக வழங்க உள்ளாாகள்.

தூண்டிலில் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் உதியை கையாண்டு உள்ளனர். மேலும் தொடர்ந்து இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உன் சூழலிலும் பத்திர பதிவுத்துறை அவசர கதியில் நிதி ஒதுக்கி வேலைகளை துரிதமாக செய்து வருவதை பார்க்கும் போது ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்குமோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.

. பணப்புழக்கம் அதிகமாக நடைபெறும் இந்த அலுவலகம் காட்டுப்பகுதியில் அமைந்தால் பொதுமக்களின் பொருளாதாரத்திற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத சூழல் ஏற்படும்.

எனவே, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு, உடன்குடியின் மையப் பகுதியில் சார்பதிவு அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here