தங்கம் வென்ற பிவி சிந்து ….பிரதமர்-ஸ்டாலின் வாழ்த்து

0
1204

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியது முதலே பிவி சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவரது ஆட்டத்திற்கு ஒகுஹராவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 21-7 என பிவி சிந்து எளிதாக கைப்பற்றினார். 2-வது செட்டிலும் அதே உத்வேகத்துடன் விளையாடினார். இதனால் 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தி, அதையும் 21-7 எனக் கைப்பற்றி தங்கம் வென்றார்.

இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் முதன்முதலாக தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பிவி சிந்து படைத்துள்ளார்.

இந்நிலையில்,  உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-  இந்தியாவை மீண்டும் பெருமை கொள்ளச் செய்திருக்கும் பி.வி.சிந்துவிற்கு வாழ்த்துகள்.  பி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளார். பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என பதிவிட்டுள்ளார்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்

மு.க .ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கும். அவர் வரும் காலங்களில் பல வெற்றிகளை பெற நான் வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here