கல்கி சாமியார் வீட்டு காம்பவுண்டை தாண்டுமா அமலாக்கத்துறை?

0
1215

பிரபல சாமியார் கல்கி ஆசிரமத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ரூ.44 கோடி இந்திய பணம், ரூ.20 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம், 33 கோடி ரூபாய் மதிப்புள்ள 90 கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
800 கோடிக்கு மேல் கணக்கில் காட்டாத பணம் உள்ளது. 4 ஆயிரம் ஏக்கர் நிலம் பினாமி பெயரில் வாங்கப்பட்டுள்ளது. 100 கோடி ரூபாய்க்கு பிரிட்டன், விர்ஜின், ஹவாய் தீவுகளில் சொத்து வாங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது வருமான வரித்துறை.
வருவாய் துறை கைப்பற்றிய நகை, பணம் பட்டியலில் கையொப்பமிட கல்கி சாமியாரின் மகனான கிருஷ்ணா, அவரது மருமகள் ப்ரீத்தி ஆகியோர் மறுத்துவிட்டனர். எந்த கேள்விக்கும் பதிலளிக்கவும் தயாராக இல்லை. எனவே, நாளை சென்னை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்தது.
இதையடுத்து அவர்களுக்கு உடல்நலம் குன்றி விட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டனர். அந்நிய செலாவணி மோசடி உள்ளிட்ட பல மோசடிகள் நடந்துள்ளதால் அமலாக்கத்துறை இவர்களையும், கல்கி பகவானான விஜயகுமார், பத்மா தம்பதியையும் கைது செய்யலாம் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சிதம்பரம் வீட்டு காம்பவுண்டை விட கல்கி சாமியார் வீட்டு காம்பவுண்ட் உயரம் என்றாலும், அதையும் தாண்டிக் குதிக்கும் வல்லமையுடையவர்கள் அமலாக்கத்துறையில் உண்டு என்கின்றனர் காவல்துறையினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here