இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியாவும் பிரிட்டன் அணியும் மோதியது.
இதில் கிரேட் பிரிட்டனை 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இதில் சிறப்பாக ஆடிய தில்ப்ரீத், குர்ஜந்த், ஹர்திக் கோலடித்தனர். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி.
இதற்கு முன் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியாவின் செயல்பாடு மிக மிக மோசமாகவே அமைந்தது. இதன் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பின் அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.













