கரோனா குற்றச்சாட்டு: பல்டியடித்தாலும் நடிகர் மீது பாய்ந்தது வழக்கு

0
1647


நடிகரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான வரதராஜன், கரோனாவால் பாதிக்கப்பட்ட தனது நண்பருக்கு அரசு மருத்துவமனையிலோ, தனியார் மருத்துவமனையிலோ படுக்கை கிடைக்கவில்லைஅரசு செயலர் மட்டத்தில் கூட பேசினர். ஆனாலும் படுக்கை கிடைக்கவில்லை என காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதை மறுத்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், ‘ 5 ஆயிரம் வரை ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் தயாராக உள்ளன. எனவே, தவறான தகவலை பேரிடர் காலத்தில் பரப்பிய வரதராஜன் மீது வழக்குப்பதிவு செய்யவுள்ளோர்ன் என பேட்டியளித்தார்.
அதையடுத்து நடிகர் வரதராஜன் பல்டி அடித்துள்ளார். ‘அரசு எவ்வளவோ முயற்சி செய்கிறது. காவல்துறையினர், சுகாதார துறையினர் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நமக்காக தியாகம் செய்திகொண்டிருக்கிறார்கள்’என்று புகழ்ந்து தள்ளியவர், ‘ தனது நண்பருக்கு படுக்கை கிடைத்துவிட்டது’ என்றும் கூறினார்.
ஆனாலும், அரசு அவரை விடவில்லை. பொது சுகாதார இயக்குநர் புகரின் பேரில் சென்ன மத்திய குற்றப்பிரிவு காவல் அதிகாரி அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். தொற்றுநோய் தடுப்பு சட்டம், பேரிடர் சட்டம் உள்ளிட்டவற்றின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here