போலி எஸ்எம்எஸ் மூலம் வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரம் மோசடி

0
948


கோவை
ரேஸ்கோர்ஸ் சுப்பு அப்பார்ட்மெண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன் சந்தோஷ் (38). இவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ளார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்எம்எஸ் ஒன்று வந்துள்ளது. அதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அக்கவுண்ட் விபரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று ஒரு இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. புதுப்பிக்க விட்டால் வங்கியின் கணக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த இணைப்பில் சென்று அதில் கேட்கப்பட்ட விவரங்களை சந்தோஷ் பூர்த்தி செய்தார். இதையடுத்து அவரது மொபைல் போன் எண்ணிற்கு ஓடிபி எண் வந்து உள்ளது. அந்த ஓடிபி எண்னை அதில் அவர் பதிவு செய்தார். உடனடியாக அவரது வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார் சந்தோஸ் இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here