ரயில்வே கவுண்டரில் இருந்த ரூ.1.32 லட்சம் களவு – ஆன்லைன் ரம்மி கடனை அடைக்க ஊழியர் நாடகம்

0
629

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் கவுண்டரில் இருந்த ரூ.1.32 லட்சம் பணம் களவு போனதாக ஊழியர் டீக்காராம் நடத்திய நாடகம் குறிதது ரயில்வே டிஐஜி ஜெயகெளரி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது ஜெயகெளரி கூறியதாவது:

ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர் ஊழியர் டீக்காரமனுக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடி தோற்றும் போயிருக்கிறார். இதனால் டீக்காராமுக்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்தன. அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார்.

எனவே, மனைவியுடன் சேர்ந்து கொள்ளை போய்விட்டதாக நாடகமாடியிருக்கிறார். அதிகாலையில் ரயில் நிலையத்துக்கு வந்த டீக்காராம் கவுண்ட்டரில் இருந்த ரூ1.32 லட்சம் பணத்தை மனைவியிடம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அவரையே கட்டிப்போட்டுவிட்டு போகவும்சொல்லி இருக்கிறார்.

டீக்காராம் வீட்டில் இருந்து ரூ1.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்ய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here