கோவையில் தீபாவளியன்று விடிய விடிய மதுபானம் அருந்தியதால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்சேர்ந்தவர்கள் பார்த்திபன் (31), சக்திவேல் (60). இருவரும் பெயிண்டர்களாக பணிபுரிந்து வந்தனர். இப்பகுதியில் சமையல்காரராக பணியாற்றிய தென்காசியை சேர்ந்த முருகானந்தம் (55) இவர்களுடன் நண்பராகியுள்ளார். தீபாவளியை கொண்டாட முடிவு செய்து முந்தைய நாள் மாலை 6.30 மணி அளவில் மூவரும் பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியுள்ளனர். விடிய விடிய மது அருந்திய மூவரும் ஒருவர் பின் ஒருவராக விழுந்து மடிந்தனர்.
போலீசாரும் தடயவியல் நிபுணர்களும் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர். பிரேத பரிசோதனையில் மூவரும் குடித்த மதுவில் விஷம் கலந்திருந்தது அம்பலமானது. முன்பகை காரணமாக மதுவில் விஷம் கலந்த அப்பகுதியை சேர்ந்த ராஜசேகர் (63) ரேஸ் கோர்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.













