ஸ்ரீவை. அருகே வாகனங்களை கவிழ்க்க காத்திருக்கும் சாலைப் பள்ளம்

0
632


தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியிலிருந்து காடுவெட்டி செல்லும் சாலையில் 4 ரோடு சந்திப்புக்கு முன்பாக சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அரிப்பு ஏற்ப்பட்டு பெரிய அளவிலான பள்ளம் காணப்படுகிறது.. சிறிது கவனம் இல்லாவிட்டாலும் அந்த கொடும்பள்ளத்தில் வாகனங்கள் கவலை வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் இந்தப் பள்ளம் எளிதில் கண்ணில் தெரியவில்லை.

ஏற்கனவே நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் பொறுமுகின்றனர். இப்பகுதியில் அமைந்திருக்கும் வைணவ திருத்தலங்களுக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிக வாகனங்களில் மக்கள் கூட்டம் வரும். இனியாவது துரித நடவடிக்கை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here