மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். நாளை பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய நிலையில், சிவசேனா முதல்வர் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்ததால் அந்த அழைப்பை பாஜக மறுத்துவிட்டது.
இதையடுத்து சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். சிவசேனாவும் தேசியவாத காங்கிரசுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ‘பாஜக உறவை முறித்துக்கொண்டுவந்தால் சொந்தம் கொண்டாடலாம்’ என அறிவித்தது.
இதையடுத்து இன்று காலை மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சராக இருந்த சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பாஜக _ சிவசேனா கூட்டு முறிந்தது. சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரசோடு காங்கிரசும் ஆதரவு அளிக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது.