திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செங்கம் அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் இரண்டு நோயாளிகளை மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தானகவுண்டன்புதூர் கிராமம் அருகே உள்ள ஓடை நீரில் பாய்ந்தது.

வெள்ளத்தில் சுழன்ற ஆம்புலன்சை அந்தப்பகுதி மக்கள் தடுத்து கட்டுப்படுத்தினர். பின்னர் ஆம்புலன்ஸ் வாகனத்தை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பாதுகாப்புடன் மீட்டெடுத்தார்கள்.

ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த பலத்த போராட்டத்தில் நல்லவேளையாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து சென்ற நோயாளிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.














