இளைஞர்களை குறிவைக்கும் ரௌடிகள், எளிதாக கிடைக்கும் துப்பாக்கிகள்

0
1650

இன்றைய மோசமான அரசியல் சூழ்நிலையால் தமிழகம் முழுவதும் வன்முறை கலாச்சாரம் விரைவில் பரவி வருகிறது. வேலையற்ற இளைஞர்களை இழுத்துப்போட்டு குற்றச்செயல்களில் பயன்படுத்துவதை பல ரௌடி கும்பல்கள் அஜென்டாவாகவே கொண்டுள்ளன. வண்டலூர் அருகே பாலிடெக்னிக் மாணவஎ முகேஷ் நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பின்னணியிலும் இந்த காரணம் இருந்துள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த பாலிடெக்னிக் முகேஷுக்கு (19)அப்பகுதியை சேர்ந்த விஜய் (21), அவரது சகோதரர் உதயா ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். இரு நாட்களுக்கு முன்பு முகேஷ் தனது நண்பரான விஜய் வீட்டுக்கு சென்றுபேசிக்கொண்டிருந்தபோது அவரை விஜய் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். விஜய் துப்பாக்கியுடன் தலைமறைவானார்.பின்னர் விஜய் செங்கல்பட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இதையடுத்து சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட விஜயிடம் விசாரித்தபோது, முதலில் குப்பை தொட்டியில் இருந்து துப்பக்கியை எடுத்ததாகவும், தவறுதலாக சுட்டுவிட்டதாகவும் கூறினார்.
நீண்ட விசாரணைக்கு பின்பு ரவுடி கும்பலிடமிருந்து துப்பாக்கியை பெற்றதும், ரவுடி கும்பலில் சேர மறுத்ததால் முகேஷை சுட்டுக் கொன்றதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கூலிப்படைகளை களையெடுக்க ஜெயலலிதா காலத்தில் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது. ரௌடி வேலைக்கு ஆள் சேர்க்கும் இத்தகைய நடவடிக்கையை தொடக்கத்திலேயே தடுக்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here