காரியாபட்டி ஒன்றிய கூட்டத்தில் அதிகாரிகளுடன் அதிமுக கவுன்சிலர்கள் கடும் விவாதம் – வெளிநடப்பு

0
984

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துமாரி தலைமையிலும் துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது .
கூட்டத்தில், நடந்து முடிந்த சட்டமன்ற அமோக வெற்றி அமைச்சர்களாக பதவியேற்றுள்ள தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது .

கூட்டத்தில், யூனியன் சார்பாக வரவுசெலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. இதில் கொண்டு வந்த தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்களின் விவாதம் நடந்தது. அப்போது கவுன்சிலர் தோப்பூர் முருகன் ’அல்லார பேரி கிராமத்துக்கு ஒன்றிய கவுன்சிலர் என்ற முறையில் கொண்டுவந்த வேலைக்கு ஊராட்சி மன்றத் தலைவருக்கு வேலைக்காக உத்தரவை ஏன் கொடுத்தீர்கள்? ஒரே ஊரில் இரண்டு பேருக்கு ஆர்டர் கொடுக்கலாமா?” என்று கேட்டார்.

கவுன்சிலர் திருச்செல்வம், ‘மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் எங்களிடம் அதிகாரிகள் எதையும் கேட்காமல் புறக்கணித்து வருகிறார்’ என்றார். டெங்கு காய்ச்சல் ஒழிப்புக்காக தற்காலிக பணியாளர்களுக்கு சுமார் 10 லட்ச ம் செலவு செய்யப்பட்டுள்ளதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். தோப்பூர் முருகன் , ‘டெங்கு காய்ச்சலே கிடையாது. அப்படி வீணாக செலவு செய்யும் பணத்தில் கொரோனா தடுப்பு பணிகளை செய்யலாம்” என்றார். கவுன்சிலர் நாகபாண்டீஸ்வரி, ‘ மக்களின் தேவைகள் பற்றி யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி யிடம் கேட்டால் இங்கு உங்களுக்கு என்ன வேலை? என்றகிறார்’ என்றார்.

கவுன்சிலர் சேகர், ‘அரசகுளம் கிராமத்தில் 24 தனிநபர் கழிப்பறை கட்ட சொல்லிவிட்டு வேலைக்காக ஆர்டரை பயனாளிகளுக்கு தெரியாமல் ரத்து செய்துவிட்டனர். இதனால், பயனாளிகள் செய்துமுடித்த வேலைக்கு இதுவரை பணம் போடவில்லை’ என்று குற்றஞ்சாட்டினார். இறுதியாக, ஒவ்வொரு கூட்டத்திலும் மக்கள் தேவைகள் பற்றி எதை சொன்னாலும் அதிகாரிகள் செய்ய மறுத்துவிடுகின்றனர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்கிறார்’ என்று கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here