கோவை ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் கடந்த மூன்று மாதங்களாக இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் நடமாட்டம் குறித்து காவல்துறை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்தவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். மேலும் பீளமேடு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் ஆணையர் உத்தரவின் பேரில் பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் தெய்வசிகாமணி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜ்குமார் மற்றும் மோகன் இருவரும் மர்ம நபர் ஓட்டி வந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அவரை தேடி வந்தனர்
. இந்நிலையில் கோவை கணபதி அத்தனூர் அம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி வீட்டில் கூடியிருந்த அந்த நபரை நேற்று காவல் நிலையத்துக்கு அழைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த நபர் நவ இந்தியா உடையாம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிவதாகவும் அப்போது அந்நிறுவனத்தில் பணி புரியும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதல் ஆக மாறியுள்ளது.
அப்பெண் மசக்காளிபாளையம் சாலை லால்பகதூர் நகரில் கரூர் வைஸ்யா ஏடிஎம் அருகே உள்ள வீட்டின் மாடியில் வசித்து வருவதால் கடந்த 3 மாதமாக அப்பெண்ணின் வீட்டிற்கு காலையிலும் இரவிலும் சென்று வந்ததாகவும் தெரிவித்தார். அதுபோல அந்த பெண்ணையும் அழைத்து விசாரணை செய்த பொழுது இருவருக்கும் உள்ள தொடர்பு தெரியவந்தது.
அப்பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால் காவல்துறையினர் உரிய அறிவுரையும் கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் அதே பகுதியில் உள்ள பெரியார் நகரில் வசிக்கும் வீட்டு உரிமையாளர உறவினர் இந்த தொடர்புக்கு உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.














