கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு கட்டிட தொழிலாளி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகனும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இவர் கட்டிட வேலைக்காக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவதால் தனது குழந்தைகளை மாமியாரின் பராமரிப்பில் விட்டுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி மாலை அவரது மகளான 8-ம் வகுப்பு மாணவி அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு பூ பறிப்பதற்காக சென்றார். பிறகு அவர் தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்ற வாலிபர் அந்த வழியாக வந்தார். அவர் மாணவியை அந்த பகுதியில் உள்ள பாழைடைந்த வீட்டிற்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இதனால் பயந்துபோன மாணவி கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர், நடந்ததை வெளியில் கூறினால் மாணவியை கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த தகவல் அறிந்ததும் மாணவியின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வாலிபர் செல்வம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக் டர் சாந்தி, ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மீனா ஆகியோர் விசாரணை நடத்தி வாலிபர் செல்வத்தை தேடி வருகிறார்கள்.