தமிழக முதல்வர் பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வருகிற 28ந் தேதி முதல் செப்டம்பர் 7ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் வெளிநாட்டில் உள்ள கால கட்டத்தில் அவரது பொறுப்புகள் வேறு யாரிடமும் ஒப்படைக்கப்படாது. முதல்வர் எங்கிருக்கிறாரோ அங்கிருந்து கையொப்பமிடப்பட்டு பேக்ஸ் வழியே அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும்.
இந்த நிலையில் வெளிநாட்டு பயணத்திற்கு முன், சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் கல்வி, உணவு, எரிசக்தி துறை மற்றும் தொழில்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்.சி. சம்பத், காமராஜ் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்















